தர்மபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் ஒருவர் ஆற்றிற்கு மீன்பிடிக்கச் சென்ற வேளை வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்  கணேசமூர்த்தி குலேந்திரன், என்ற (வயது 33 ) இளம் குடும்பஸ்தரே நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here