பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழந்துள்ளதால் இழப்பீட்டை மொத்தமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சமீபத்திய புயல் மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here