அசைவ உணவுகளை விடவும் சைவ உணவுகள் மிகவும் சத்தானவை.

அந்த வகையில் வழமையாக உண்ணும் காய்கறிகளைப் பார்க்கிலும் சில காய்கறிகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை.

அன்றாடம் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

சுரைக்காய்

சுரைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அத்துடன் விட்டமின் சி, விட்டமின் கே, மெக்னீசியம், கல்சியம் போன்றவையும் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்கவும் செரிமானத்தை அதிகரிக்கவும் உதவும்.

வெள்ளைப்பூசணி

நார்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளைப்பூசணியில் உடல் எடையைக் குறைக்கும் சக்தி அதிகம் உண்டு. மேலும் இதில் விட்டமின் ஏ,சி போன்றவையும் அதிகம் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம், தாதுக்கள் போன்றவையும் உள்ளதால் தசை செயல்பாட்டுக்கு மிகவும் உதவி செய்யும்.

புடலங்காய்

அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறியில் புடலங்காயும் ஒன்று. இது செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுவதோடு, எடையையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். விட்டமின் சி சத்தும் இதில் காணப்படுகிறது.

பீர்க்கங்காய்

விட்டமின் சி, விட்டமின் ஏ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பீர்க்கங்காயில் நிறைந்துள்ளன. இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பாகற்காய்

கசப்பு சுவை கொண்ட பாகற்காயில் ரத்த சர்க்கரை அளவு குறையும் சக்தியுண்டு விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here