இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் அவரது சிரேஷ்ட அதிகாரிகள் குழு, 2025 செப்டம்பர் 22 நேற்றைய தினம் இலங்கை இராணுவத் தலைமையகத்தை பார்வையிட்டனர்.

இராணுவத் தலைமையக வளாகத்தில் அவர்களை அன்புடன் வரவேற்றி, இராணுவ சம்பிரதாயத்திற்கு ஏற்ப மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இந்திய கடற்படை பதவிநிலை பிரதானியை வரவேற்றி, இராணுவ முதன்மை பணிநிலை அதிகாரிகளை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இருதரப்பு பாதுகாப்பு தலைவர்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கியமான கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here