இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்தில் உள்ள எரிமலை வெடித்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (20) நள்ளிரவு வெடித்துள்ளது.

மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின.

இதனால் அவுஸ்திரேலியா – இந்தோனேசியா இடையே செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here