தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது.

இது ஒரே நாளில் ஏற்பட்ட 5.16 சதவீத அதிகரிப்பாகும்.

உலக சந்தையின் இந்த விலை அதிகரிப்பு இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் வழங்கிய தகவலின்படி, இன்று 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்து 277,000 ரூபாவாக விற்பனையாகிறது.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 3000 ரூபாவினால் அதிகரித்து 255,000 ரூபாவிற்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மாத்திரம் ஆபரண தங்கத்தின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையில் குறைவடையக்கூடும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகப் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here