மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வடமாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குசரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென்,வடமத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலைமற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 kmவேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரிமொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும்ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில்அவதானத்துடன் செயற்படுமாறுபொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின்மத்தியில் நிலைகொண்டிருந்த மிகப் பலம்வாய்ந்த "மொன்தா" சூறாவளியானது நேற்றுஇரவு 11.30 மணியளவில் ஆந்திரப்பிரதேசத்திற்கும் ஜனத்திற்கும் இடையானகரைப் பிரதேசத்தை ஊடறுத்து தரைப்பிரதேசத்தை அடைந்துள்ளது.

இலங்கையின் வட பகுதியின் ஆழமான கடல்பிராந்தியங்களுக்கு அடுத்துவரும் 24மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார்ஊழியர்களும் செல்ல வேண்டாம் எனஎச்சரிக்கப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாககளுத்துறை வரையான கடல் பிராந்தியங்களில்சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30- 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்துகாற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலைவரையான கடல் பிராந்தியங்களில்மணித்தியாலத்திற்கு 60 km இலும் கூடியவேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக்காணப்படும்.

சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாககாங்கேசன்துறை வரையான அத்துடன் காலிதொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில்மணித்தியாலத்திற்கு 55 – 60 km இலும் கூடியவேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்துவீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகஅல்லது கொந்தளிப்பான நிலையில்காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here