எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் IMF உடனான சீர்திருத்த வேலைத்திட்டத்தைத் தொடங்கியதன் பின்னணியில், நாட்டின் பொருளாதாரம் வலுவான மீட்சியை கண்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டின் முதல் பாதியில் 4.8% வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், தற்போதைய நிலை வலுவான மீட்சியிலிருந்து சாதாரண பொருளாதார நிலைக்குத் திரும்பும் கட்டமாக காணப்படுவதாகவும், சில வளர்ச்சிகளின் தாக்கம் தற்காலிகமானது எனவும் குறிப்பிடப்பட்டது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீளும் வாய்ப்பு இருப்பதாக IMF தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here