தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி மேற்கு வடமேற்கு நோக்கி நகரும். அதன்பின்னர் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
இந்த முறைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நாட்டின் கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








