நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








