மறைந்த பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையின் போது யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமீர் செலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விருப்பம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி யுக்ரைன் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ள சந்திப்பாக அமைந்திருந்ததாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சந்திப்பு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு ஏதுவாக அமையும் எனவும் யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here