நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது.

பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அம்பாறை , மட்டக்களப்பு , பொலனறுவை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here