யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றை பண்படுத்தும் பணியின் போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன், குறித்த வெடிபொருட்கள் இன்று அகற்றப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் அண்மைக்காலமாக ஆயுதங்கள் மீட்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here