தாழ் அமுக்கப் பிரதேசமானது இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நிலைகொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது தாழ் அமுக்கமாக விருத்தியடைவதுடன் இன்று மாலையளவில் தமிழ் நாட்டின் வட கரை மற்றும் தென்ஆந்திரப் பிரதேசங்களின் ஊடாக நகர்ந்து செல்லுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென்  மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இலங்கையின் வட கரையை அண்மித்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று நிலைகொண்டுள்ளதனால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 ‌நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here