சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் ஒட்டிசுட்டான், மாங்குளம்,தெரன்கந்தல் மற்றும் மல்லாவி  போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை ,புத்தளம், கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வங்காள விரிகுடாவின் வட பகுதிக்கு மேலாக இன்றையதினம் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் காரணமாக இக் கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here