யாழ்பாணம், பருத்தித்துறை, புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) இரவு குறித்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது, சிறுவனின் வீட்டுக்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றுக்குள் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்த சிறுவன் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here