கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வரி விலக்கு வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவான சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 40 வயது நபர் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 133 அட்டைப் பெட்டிகளில் அடங்கிய 26 600 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர் மாறவில பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






