இரத்தினபுரியில் பொத்துப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புக்க பகுதியில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் ரம்புக்க பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அயல் வீட்டில் வசிக்கும் நபர் மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 28 முதல் 35 வயதுக்குட்பட்ட அயல் வீட்டில் வசிக்கும் நபர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொலை செய்யப்பட்டவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here