நாட்டில் தொடரும் பலத்த மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (03) காலை 9.00 மணி முதல் நாளை (04) காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள (Pasbage Korale) மற்றும் கங்கா இஹல கோரள (Ganga Ihala Korale) பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ‘நிலை 3’ சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கண்டி மாவட்டம் உடுதும்பற (Ududumbara) மற்றும் உடபலாத்தை (Udapalatha),
கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தோட்டை (Yatiyantota) மற்றும் அரநாயக்க (Aranayake),
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ (Ambagamuwa), நோர்வூட் (Norwood), நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு,
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒபநாயக்க (Opanayake), இம்புல்பே (Imbulpe) மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு நிலை 2 (மஞ்சள்/அம்பர் எச்சரிக்கை அதாவது விழிப்புடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் பன்வில (Panvila) மற்றும் மேதாதும்பர (Medadumbara),
கேகாலை மாவட்டத்தில் தேரணியகல (Deraniyagala) மற்றும் தியகெல/தெகியோவிட்ட (Dehiowita),
இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகலை (Nivithigala) மற்றும் குருவிட்ட (Kuruwita) ஆகிய பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள் எச்சரிக்கை – அதாவது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வரும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.








