நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டக்கலை,லொக்கில் மற்றும் ஹெரிங்டன் ஆகிய தோட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறித்த பகுதிகளில் குடியிருப்புக்கு செல்லும் பாதைகள் மற்றும் சில குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு சிலர் அப்பகுதிகளில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் தாம் இவ்வாறு அடிக்கடி சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here