இந்தியா – பாகிஸ்தானிடையே உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், இந்திய  இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து  இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, இராணுவத்தில் நிர்வாக ரீதியான மாறுதல்களை மேற்கொள்ளலாம்.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இராணுவ வீரர்களை எல்லைப்பகுதிக்கு அழைத்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1948 விதியின் கீழ் 3 ஆண்டுகளுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here