Five friends cheering on good news.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு 50% வரி விதிக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இத்தீர்மானம் அமைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியங்களுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டம் அதிகரித்து வரும் வர்த்தகப் போரில் சமீபத்திய திருப்பமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here