ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் முதலாவது தகுதிச்  சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சலன்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

மகாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்தில் உள்ளது.

ரோயல் சலன்சர்ஸ் பெங்களூர் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் இரு அணிகளும்  முதலாவது தகுதிச்  சுற்று போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு.

இன்று மோதவிருக்கும் இரு அணிகளுமே ஒன்றுக்கு ஒன்று சவாலாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இப் போட்டியானது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here