பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் நிகழ்வு நடைபெற்றுள்ள நிலையில், இதன் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

நேற்று முன் தினத்தில் ஜெஃப்ரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நேற்று அன்ஷிதா வெளியேறியுள்ளார்.

தற்போது வீட்டில்10 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதில் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது.

இறுதி கட்டத்தை எட்டி வருவதால் போட்டியாளர்களின் மோதல்களும் பரபரப்பாகவே இருந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here