இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
187 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.








