நிபந்தனையற்றதும் உறுதியானதுமான அயல் நாடாகவும் இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் சிறந்த நட்பு நாடாகவும் இந்தியா தொடர்ந்து செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற தேசியத் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசாரமும் வரலாற்று பிணைப்புகளும் மிகவும் ஆழமானவையாகும்.

எமது பாரம்பரியம் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஒன்றோடிணைந்து வளமான பிணைப்பை உருவாக்குகின்றது.

இந்த ஆழமான பிணைப்பு, தேவைப்படும் காலங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உறுதியான ஆதரவின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்தியா உதவி செய்தமையானது நீடித்த நட்புக்கான சான்றாகும்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துகின்றன என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தேசியத் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாட்டில் பொருளாதார ரீதியான சமத்துவம் அவசியமெனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here