மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று  (ஒக்டோபர் 13, 2025) பீஜிங்கில் சீன பிரதமர் லீ கியாங் (Li Qiang) அவர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கை சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ (One China Principle) ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் (Xizang) மற்றும் சின்ஜியாங் (Xinjiang) தொடர்பான விவகாரங்களில் சீனாவுக்கு திடமான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் இலங்கையை அழைத்தமைக்க சீன அரசாங்கத்திற்கு பாராட்டை தெரிவித்த பிரதமர், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவம் போன்ற முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

உலகப் பொருளாதாரம், புத்தாக்கம், வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு போன்ற துறைகளில் சீனாவின் பங்கையும் பாராட்டிய பிரதமர், இலங்கையின் “வளமான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார்.

வறுமை ஒழிப்பு, நிலையான அபிவிருத்தி, டிஜிட்டல் மயமாக்கல் (Digital Transformation), Clean Sri Lanka திட்டம் போன்ற தேசிய முன்னுரிமைகளில் சீனாவின் ஆதரவை அவர் உறுதி செய்தார்.

மேலும், கடன் மறுசீரமைப்பில் அண்மையில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள், பிராந்திய உறவுகள் மற்றும் Belt and Road முன்முயற்சி மூலம் இலங்கையில் நடைபெறும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் தொடர்ச்சியான ஆதரவை சீன பிரதமர் உறுதி செய்தார்.

இலங்கையின் பெண்கள் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் பிரதமர் கலாநிதி அமரசூரிய வலியுறுத்தினார். பெண்களின் தலைமைத்துவம், அதிகாரமளித்தல், சம வாய்ப்பு மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் தேசிய முயற்சிகள் பீஜிங்கில் சிறப்பாக முன்னிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here