இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று (நவம்பர் 19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேசவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு மதியம் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள், என்பன தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுசெயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தேசிய இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுக்கு ஜனாதிபதியுடன் நேரடியாக சந்திப்பதாக மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கட்சியின் சார்பில் சந்திப்புக்கான நேரம் கோரி ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








