சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அலுவலக அறையில் நேற்று (நவம்பர் 18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
சபாநாயகர் பொதுவாக உணவருந்தும் அறையின் பகுதியிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு உள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின் தகவல் கிடைத்ததும் நாடாளுமன்ற தோட்டப் பராமரிப்பு அதிகாரி உடனடியாக பாம்பை பாதுகாப்பாக அகற்றியுள்ளார்.
தியவண்ணா ஓயா பகுதியிலிருந்து பல்வேறு வகை பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் சில காலமாக நுழைந்து வருகின்றன. சமீப காலங்களில் சுமார் 20 பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வன இனங்கள் வளாகத்திலிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன என்று தோட்ட பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.








