Thursday, May 14, 2026
No menu items!

இலங்கைத் தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று (நவம்பர் 19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேசவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மதியம் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித்...

புதிய சட்டத்தை எதிர்க்கும் தமிழரசுக் கட்சி!!

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தாங்கள் எதிர்ப்பதாக தமிழரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (02) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர்,  ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய...

யாழ் மாநகர சபை மேயர் பதவிக்கு மதிவதனி பரிந்துரை – இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம்!

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர்...

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு பதிலடி கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்ததாக சிறிதரன் குறிப்பிட்டார். தனிநபர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்தில் சிறிதரன் இதனைத்...

தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்தியப் பிரதமருடன் சந்திப்பு!

தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்புக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை மாலை கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவற்றோடு, வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான குழு ஒன்றும் கலந்து கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தேசிய...

கொலையாளிகளுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா? – சபையில் சாணக்கியன்..!

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28/02/2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள  இராசமாணிக்கம் இல்லத்தில் இன்று (16/02/2025) தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதில் கட்சியின் பதில் தலைவர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு –  முன்மொழிவுகள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றுக்குச் சமர்ப்பித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கின் பிரதிவாதிகளான தாம் உள்ளிட்ட மூன்று பேரினால் கடந்த 7ஆம் திகதி இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அடிப்படையில்...

புதிய அரசும் ஊழலுக்கு அடிமையா? – சந்தேகம் வெளியிட்ட சுமந்திரன்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அதனை மாற்றத்துக்கான அரசாங்கமாகக் கருதமுடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேறொரு நாடு வலியுறுத்துவதானது, இலங்கைக்கு ஒரு அவமதிப்பு எனவும்...

மதுபானசாலை குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் – சபையில் சாணக்கியன்..!

நாடாளுமன்றில் நேற்று (04.12.2024) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (05.12.2024) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. எனினும்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img