இலங்கை கடற்படையின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த ஜப்பான் சுமார் 2.1 பில்லியன் ரூபாய் (100 கோடி ஜப்பானிய யென்) மேலதிக நிதியுதவி வழங்கவுள்ளது.
குறித்த உதவி 2026 நிதி ஆண்டிற்கான ஜப்பானின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதன் மூலம் இலங்கை கடற்படைக்கு Rigid Hull Inflatable Boats (RHIBs) படகுகள் கொள்வனவு செய்யப்படும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த படகுகள் கடற்படையின் கடல் கண்காணிப்பு, கண்காணிப்பு மற்றும் அனர்த்த மீட்பு திறன்களை அதிகரிக்கும்.
இதற்கான ஒப்பந்தம் நவம்பர் 10 அன்று, ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருக்கு இடையில் கையெழுத்திடப்பட்டது.
இது ஜாப்பானின் பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் வழங்கும் இரண்டாவது உதவி திட்டமாகும். முதல் திட்டமாக 2025 இல் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆளில்லா விமானங்கள் (UAVs) கொள்வனவு தற்போது நடைபெற்று வருகிறது.
சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் ஜப்பானின் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.








