கடந்த நான்கு மாதங்களாக தேசிய மருத்துவமனை உட்பட அரச மருத்துவமனைகளில் குருதிப் பரிசோதனைகள் நடைபெறவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் உட்பட 380க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் தனியார் ஆய்வுக்கூடங்களுக்கு செலவழிக்க நேர்கிறது.
முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள், தற்போது நோயாளிகளை ரூ.50,000 – ரூ.1,00,000 வரை செலவழிக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இதய சத்திரசிகிச்சை அலகுகளில் கூட, நோயாளிகள் தேவையான பொருட்களை வெளியே சென்று வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சுகாதாரத் துறையின் இந்த வீழ்ச்சியால், இலவச சுகாதாரத்துறை கேள்விக்குறியாகியுள்ளது எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.








