Saturday, June 13, 2026
No menu items!

முன்னாள் சுகாதார அமைச்சர்

இலங்கையின் சுகாதாரத் துறை பாரிய நெருக்கடியில்: ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு!

கடந்த நான்கு மாதங்களாக தேசிய மருத்துவமனை உட்பட அரச மருத்துவமனைகளில் குருதிப் பரிசோதனைகள் நடைபெறவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் உட்பட 380க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் தனியார் ஆய்வுக்கூடங்களுக்கு செலவழிக்க நேர்கிறது. முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட சத்திர...

97 மில்லியன் ரூபாய் நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறுபேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகிய ஆறுபேர் மீது, 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இன்று (ஜூலை 17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி...

கெஹெலியவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (5/20/2025) உத்தரவிட்டார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.     <!-- -->

கெஹெலியவுக்கு எதிரான விசாரணை குறித்து சட்டமா அதிபரின் கோரிக்கை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி தொடர்பான வழக்கு விசாரணை மேற்கொள்ளவே மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் கெஹெலிய ரம்புக்வெல்ல..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானார். இதனையடுத்து, அவர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் கோரிக்கையை நிராகரித்த மேல் நீதிமன்றம்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பாராளுமன்ற வங்கிக்கிளையில் உள்ள கணக்கை முடக்குவதற்கான உத்தரவை நீக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கெஹெலியவிற்கு விதிக்கப்பட்ட தடை-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வார காலத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய...

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

மருந்துகளின் அவசியத் தன்மையுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, கொள்கை அடிப்படையிலேயே, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம்...

கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ரம்புக்வெல்ல, அரசியலுக்கு வருவதற்கான எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தும் போது, ​​தனது ஆதரவாளர்களுக்கு தனது முடிவை அறிவித்துள்ளார். அவர் பின்வாங்கிய போதிலும், தாம் அரசியலில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img