இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்கவுடன் நெருக்கமாக இணைந்து இரு நாடுகளினதும் மற்றும் முழுப் பிராந்தியத்தினதும் நலனுக்காகப் பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








