கொழும்பு செடவத்தை பகுதியில் உள்ள களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) காலை கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்த நபருக்கு 35 முதல் 40 வரை என நம்பப்படுகிறது.
உயிரிழந்தவர் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் மேல் சட்டையின்றி, நீல நிற காற்சட்டையுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது,நீதவான் பரிசோதனைக்கு பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது,
கிராண்ட்பாஸ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(படம்-AI)








