ஈரான் – அமெரிக்க ஒப்பந்தந்தை அடுத்து பிரெண்ட் வகை எண்ணெய் $1.64 வீழ்ந்து $77.91 ஆக பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு பெரல்- 2.06 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதேவேளை WTI வகை எண்ணெய் $1.80 வீழ்ந்து 74.99 டொலர்களாக  பதிவாகி,இதற்கமைய  பெரல் ஒன்றின் விலை 2.34% குறைந்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்துக்கமைய 60 நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஹோர்முஸ் நீரிணை 30 நாளில் முழு அளவில் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் ஈரான் எண்ணெய் மீதான தடை நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது.

எவ்வாறாயினும் ஹோர்முஸ் ஊடான போக்குவரத்து ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here