இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/2026ஆம் ஆண்டின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

2025/2026ஆம் ஆண்டின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்னவால் நேற்று (15/1/2025) இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தலைவர் பதவிக்காக மூன்று வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கமைய, ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, ராஜீவ் அமரசூரி ய மற்றும் டாக்டர் சுனில் அபேரத்ன ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன் சதுர கல்ஹேன தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கு தொடர்வதற்கான வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, 2025/2026ஆம் ஆண்டுக்கான செயலாளராக சதுர கல்ஹேன போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here