Saturday, July 25, 2026
No menu items!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதன்படி இந்த சம்பவம் தொடர்பில்...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு..!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய சனிக்கிழமை (29/03/2025) பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜீவ் அமரசூரிய தெரிவு செய்யப்பட்டார். இவர் சட்டத்தரணிகள் சங்கத்தின் 29 ஆவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமா அதிபர் மீது அரசியல் அழுத்தம்..!

சட்டமா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம்...

சட்டமா அதிபரின் முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்து கடுமையான கவலை..!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் முடிவை மறுபரிசீலனை செய்வது தொடர்பானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுர பி. அவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மெத்தேகோடா மற்றும் செயலாளர் சதுரா ஏ. மெசர்ஸ்...

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் விரைவில்…!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/2026ஆம் ஆண்டின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 2025/2026ஆம் ஆண்டின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்னவால் நேற்று (15/1/2025) இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தலைவர் பதவிக்காக மூன்று வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கமைய, ஜனாதிபதி...

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் நியமிப்பு…!

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்...

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் !

செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நிறைவேற்றுத் தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. உயர் பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுதல். சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், நல்லாட்சி யுகத்தை ஏற்படுத்துவதற்கும், தண்டனையில்லா கலாசாரத்தை...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவித்தல்…!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியை இராஜிநாமா செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்ய நவரட்னவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (31.08) ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை  (10) சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌல்ய நவரடண தலைமைப்பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேநேரம், செயலாளர் பதவிக்கு சட்டத்தரணி சத்துர கல்ஹேன வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.. இந்த தெரிவுக்கான தேர்தல் அதிகாரியாக அலுவலகர்...

தன்னிச்சையான கைதுகளை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

தன்னிச்சையான கைதுகள், காவல்துறையினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மற்றும் கொலைகளை நிறுத்துமாறு , அதிகாரிகளிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நீதிச்செயன்முறை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் ஊடாக கோரியுள்ளனர். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தன்னிச்சையான கைதுகள், பிடியாணையற்ற காவல்துறை சோதனைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பில் இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img