இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன இன்று (04) தனது கடமைகளை தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக 37 வருடங்கள் கடமையாற்றியுள்ளதுடன் மூன்றரை வருடங்கள் சுங்க ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றிய சிறந்த அதிகாரியாவார்.

அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கான்பெரா பல்கலைக்கழகத்தில் சுங்க சட்டம் மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here