விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, அதன் சித்தாந்தத்தைப் பாதுகாப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,இதன் காரணமாக தான் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம் என கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் பல ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியுள்ளதோடு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அர்ச்சுனா, இலங்கைக்கு திரும்பியவுடன் தான் “நிச்சயம் கைது செய்யப்படுவேன்” என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், தான் மறைந்த விடுதலைப் புலிகள் தலைவரைக் குறிப்பிட்டதும் இலங்கைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here