இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தம்புள்ளையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் 136 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சரித் அசலங்க 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தோடு போட்டியின் நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.







