ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24.09.2024) மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








