இலங்கை மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 22) காலை, இலங்கை மின்சார சபையின் சில ஊழியர்கள் புதிய நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த கடிதங்களை மின்சார சபை தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவிடம் அதிகாரப்பூர்வமாக கையளித்தனர்.

இந்த நடவடிக்கைகள், 2025 ஆம் ஆண்டு 14ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின்படி நிறுவப்படும் புதிய நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பை முன்னெடுத்ததாகும். அந்த நிறுவனங்கள்:

தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு (தனியார்) நிறுவனம்

தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவைகள் வழங்கல் (தனியார்) நிறுவனம்

இலங்கை மின்சார விநியோக நிறுவனம் (தனியார்) நிறுவனம்

இலங்கை மின்சார உற்பத்தி நிறுவனம் (தனியார்) நிறுவனம்

எனும் நான்கு நிறுவனங்களாகும்.

இந்த மறுசீரமைப்புத் திட்டம், நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் ஒட்டுந்தகைய மின்சாரத் துறையின் மேம்பாட்டை இலட்சியமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. புதிய அமைப்பு மற்றும் பணியிட மாற்றங்களை மின்சார சபை ஊழியர்கள் நேர்மறையாக ஏற்றுக் கொள்கின்றனர் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here