இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் உள்ள என்ஜின் இயந்திரம் மற்றும் பயண பெட்டிகள் (diesel multiple unit) கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளதால் ரயில் சேவைகள் பெரும் நெருக்கடியை சந்திக்கலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்ததாவது,

2023 ஆம் ஆண்டில் 106 ஆக இருந்த மொத்த என்ஜின் இயந்திர கையிருப்பு, 2026-ல் 98 ஆக குறைந்துள்ளது. ரயில்களை இயக்கும் 8 என்ஜின் இயந்திரங்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

2023 நேர அட்டவணைக்கமைய 450 ரயில் சேவைகளை இயக்க 74 என்ஜின்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த சமயத்தில் 68 என்ஜின்கள் மாத்திரமே இயக்க தகுதியில் இருந்தன.

இன்று அது 49 ஆக மேலும் குறைந்துள்ளது.

2023-ல் 109ஆக இருந்த பயண (என்ஜின்கள் இல்லாது இயங்கும் பயண அலகுகள்) பெட்டிகள் கையிருப்பு 2026-ல் 106 ஆக குறைந்துள்ளது.3 பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சேவைக்கு 88 பயண அலகுகள் (DMU) தேவைப்படுகிறது,எனினும்  இயக்க தகுதியில் 52 மாத்திரமே உள்ளது இதனால் 26 பயண அலகுகளுக்கு  பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த நிலையை உடனடியாக சரிசெய்து, தற்போதைய நேர அட்டவணைப்படி ரயில் சேவைகளை தொடர்ந்து நடத்த அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கசுன் சாமர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here