வெலகெதர பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொடூர கொலை மற்றும் 3 பேரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் திகதி அல்லது அதனை ஒட்டிய காலப்பகுதியில் தியகவிட, வெலகெதர பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் இரவு நேரத்தில் புகுந்த குற்றவாளிகள் குழு, கல், கம்பு மற்றும் வாள்களால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் திருமணமாகாத ஒரு ஆண் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி, தந்தை, தாய், அவர்களின் இரு பிள்ளைகள் மற்றும் மற்றொரு நண்பர் ஆகியோர் கொலை மற்றும் கொடூர தாக்குதல் குற்றங்களில் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
இதற்கமைய 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.








