மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபஸ் (Chiapas) கடற்கரைக்கு அருகில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் நாடுகள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, நிலநடுக்க மத்திய நிலையத்திலிருந்து சுமார் 300 கி.மீ தூரம் வரை சுனாமி அலைகள் ஏற்படலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த உயிரிழப்போ அல்லது பெரிய சொத்து சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








