அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 52 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 376 ரூபா 90 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 33 சதம், விற்பனைப் பெறுமதி 312 ரூபாய் 86 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 333 ரூபாய் 34 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 2 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 80 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 189 ரூபாய் 26 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 89 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 83 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 91 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.








