இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க நேற்று (ஜனவரி 10) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சட்ட நடவடிக்கை எடுக்க ஒரு தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்ட திரு.ரங்க திஸாநாயக்கவை விட அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் இருப்பதாகவும், இந்த நியமனம் தொடர்பான அரசியலமைப்பு பேரவையின் நடைமுறைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அரசியலமைப்பு பேரவை அலுவலகம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்கு 16 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணியில் உயர்மட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் குற்றம் சாட்டுவதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here