பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் தொடர்பில் அவருக்கு எதிராக தொடரும் விசாரணைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்த சம்பவத்தில் 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவால் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








