ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு முறைக்கேடான வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உதவி வழங்கியதாக கூறப்படும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் சந்தேக நபர் நேற்று (17) காலை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








